Wednesday, May 9, 2007

வணக்கமுங்கோ

என்னுடைய சாம்ராஜ்யத்துக்கு தங்களை வருக வருக என வரவேற்கும் நான் தான் நல்லவன் ஆனால் கெட்டவன். என்னடா இவன் எப்ப பார்த்தாலும் நல்லவன் ஆனால் கெட்டவன், நல்லவன் ஆனால் கெட்டவன்னு சொல்லுறானேனு பாக்கறீங்ளா? அதுக்கும் காரணம் இருக்குங்க

1. கோழிய கொல்லமாட்டேன் so நான் நல்லவன், ஆனால் கொன்ன பின்னாடி நல்லா சாப்பிடுவேன் so நான் கெட்டவன்.

2.எப்பவும் உண்மையை மட்டுமே பேசுவேன் so நான் நல்லவன், ஆனால் சில சமயங்களில் கொஞ்சம் பொய் சொல்லுவேன் so நான் கெட்டவன்.


3. கொஞ்சம் அதிகம் பேச மாட்டேன் so நான் நல்லவன் , ஆனால் ரொம்ப அதிகமா பேசுவேன் so நான் கெட்டவன்.

4.பிஃகர் (figure) களை கண்ணால் காயப்படுத்த மாட்டேன் so நான் நல்லவன்,ஆனால் கிண்டல் பண்ணுவேன் so நான் கெட்டவன்.


5.தட்டிக் கொடுத்தால் கட்டி அணைப்பேன் so நான் நல்லவன்,ஆனால் தட்டி விட்டால் எட்டி உதைப்பேன் so நான் கெட்டவன். ( பாருடா punch டயலாக்க )


இப்ப சொல்லுங்க நான் நல்லவனா இல்லை கெட்டவனா? இந்த நாயகன் பட டயலாக்க மாதிரி தெரியலயேப்பானு எல்லாம் சொல்லப்படாது.

wherever we go we should leave our marks ---- so நீங்க இங்க வந்ததுக்கு அடையாளமா ஏதாவது குறிப்புகளை விட்டுச் செல்லுங்கள், காசா பணமா? விடுற குறிப்ப நல்ல குறிப்பா விட்டுட்டு போனீங்கண்ணா சந்தோசம், இல்லங்க்காட்டியும் வருத்தப்பட மாட்டேன் அது வேற விஷயம்.

அன்புடன்
******* *****